உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மத்திய அரசின் திட்டங்கள் பற்றி கருத்து கேட்க வரும் வாகனம்; பா.ஜ., தேர்தல் பிரசார திட்டம்

மத்திய அரசின் திட்டங்கள் பற்றி கருத்து கேட்க வரும் வாகனம்; பா.ஜ., தேர்தல் பிரசார திட்டம்

தேனி : லோக்சபா தேர்தலில் பா.ஜ., சார்பில், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் கருத்து கேட்பு பெட்டியுடன் வாகனம், தலைவர்கள் பிரசாரத்திற்கு பிரத்யேக வசதிகள் கொண்ட வாகனங்கள் மாவட்டம் தோறும் உலா வர உள்ளது.மத்திய அரசின் திட்டங்களின் பயன்பெறுவோரின் விபரம் சேகரித்து அந்த பயனாளிகளின் வீட்டிற்கே சென்று 'பயனாளிகள் முன்னேற்றம், மோடியின் உத்தரவாதம்' என்ற போஸ்டர் ஒட்டி அவர்களிடம் கருத்து கேட்க உள்ளனர்.புது முயற்சியாக கருத்து கேட்பு பெட்டியுடன் இணைந்த பிரசார வாகனங்கள் தொகுதிகளில் வலம் வர உள்ளது. இதில் பொது மக்கள் மத்திய அரசு திட்டங்களில் சாதக, பாதகங்கள், இனிமேல் மத்திய அரசு கொண்டு வர வேண்டிய திட்டம் பற்றி கடிதங்களாக வழங்கலாம். மேலும் பா.ஜ., கூட்டணி கட்சிகளின் பேச்சாளர்கள், வேட்பாளர்கள்,அகில இந்திய, மாநில தலைவர்கள் வந்து செல்லும் போது, ஏ.சி., வசதிகளுடன் கூடிய பிரசார வாகனங்கள் மாவட்டத்திற்கு 2 வாகனங்கள் வீதம் தேர்தல் பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் மாவட்டத்திற்கு ஒரு பிரசார வாகனம், கருத்து கேட்பு வாகனம் ஓரிரு நாட்களில் வந்து தெருத்தெருவாக மக்களின் கருத்துக்களை கேட்க உள்ளன.', என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை