உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குடிநீர் மேல்நிலைத் தொட்டி திறப்பு விழா

குடிநீர் மேல்நிலைத் தொட்டி திறப்பு விழா

ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி ஒன்றியம் பிராதுக்காரன்பட்டி, அனுப்பபட்டி கிராமங்களில் எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை தொட்டிகளை பெரியகுளம் எம்.பி., ரவீந்திரநாத் திறந்து வைத்தார்.இக்கிராமங்களில் தலா ரூ.18 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் பெரியகுளம் எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் கட்டப்பட்டுள்ளது.திறப்பு விழாவில் அனுப்பபட்டி ஊராட்சி தலைவர் சுப்புலட்சுமி, பி.டி.ஓ.,ஐயப்பன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி சார்பில் ஒன்றிய செயலாளர்கள் நாகராஜன், இளையராஜா, மாவட்ட பிரதிநிதிகள் வாணி, சேகர், அ.தொ.ச.,நிர்வாகிகள் காளிராஜ், சேகர் செல்வம், இளைஞர் அணி தீபன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை