உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஊராட்சி தலைவர்கள் மனு

ஊராட்சி தலைவர்கள் மனு

பெரியகுளம்: பெரியகுளம் ஒன்றியம், சருத்துப்பட்டி ஊராட்சி தலைவர் சாந்தி 60. ஜன.15ல் தனது கணவர் கண்ணையனுடன் வீட்டில் இருந்தார். சருத்துப்பட்டி எம்.ஜி.ஆர்., காலனியைச் சேர்ந்த பவுன்ராஜ் 38. மது போதையில் சாந்தி வீட்டின் மீது கல்வீசி தாக்கி, அவதூறாக பேசி வீட்டிற்குள் நுழைந்து, அரிவாளைகாட்டி கொலை மிரட்டல் விடுத்தார். போலீசார் இதுவரை பவுன்ராஜை கைது செய்யவில்லை.பெரியகுளம் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் சின்னப்பாண்டியன் தலைமையில், பொருளாளர் பால்ராஜ் மற்றும் ஊராட்சி தலைவர்கள் டி.எஸ்.பி., கருணாகரனிடம், குற்றவாளியை விரைவில் கைது செய்ய கோரி மனு கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை