உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / அ.தி.மு.க., கொடியை சசிகலா பயன்படுத்த எதிர்ப்பு

அ.தி.மு.க., கொடியை சசிகலா பயன்படுத்த எதிர்ப்பு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அ.தி.மு.க., கொடியை பயன்படுத்த கூடாது என மாவட்ட செயலாளர் கணேசராஜா மற்றும் கட்சியினர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர்.'அம்மாவின் வழியில் மக்கள் பயணம்' என்ற பெயரில் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பை மேற்கொள்வதாக கூறி சசிகலா தென்காசி மாவட்டத்தில் ஜுலை 17 துவங்கி 20 வரை சுற்றுபயணம் மேற்கொண்டார்.இரண்டாம் கட்டமாக சுற்றுபயணத்தை தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இன்று மாலை துவக்குகிறார். ஆக.,18 வரை திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க., கொடியை பயன்படுத்த கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் கணேசராஜா, அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம் மற்றும் கட்சியினர் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ranganathank Ranganatjank
ஆக 14, 2024 18:45

பிராடு


RAMAKRISHNAN NATESAN
ஆக 13, 2024 08:57

அதிமுக வையே பயன்படுத்தி கோடிகளைச் சேர்த்தவர் ..... மூழ்கிவிட்ட கட்சியின் கொடியைப் பயன்படுத்தி என்ன ஆயிரப்போவுது ????


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி