உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆக., 15ல் விடுமுறை அளிக்காத 57 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

ஆக., 15ல் விடுமுறை அளிக்காத 57 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருவள்ளூர்:திருவள்ளூர் தொழிலாளர் உதவி ஆணையர் ஷோபனா தலைமையில் விடுமுறை தினமான ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திர தினத்தன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டாய்வு மேற்கொண்டனர். இதில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமலும், விதிமுறைகளை பின்பற்றாமலும் செயல்பட்ட 57 நிறுவனங்கள் கண்டறியப்பட்டது. நிறுவனங்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் ஷோபனா கூறியதாவது:அரசு விடுமுறை தினங்களில் தொழிலாளர்களை பணி செய்ய அனுமதிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு அன்றைய தினத்தில் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் அல்லது வேறு தினத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை