உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மதுபானம் கடத்தலை தடுக்க ஆலோசனை

மதுபானம் கடத்தலை தடுக்க ஆலோசனை

திருவள்ளூர்:தமிழகம் - ஆந்திர மாநில சோதனை சாவடி வழியாக, மதுபானம் கடத்தப்படுவதை தவிர்க்க, இருமாநில கலெக்டர்கள் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழக - ஆந்திர எல்லையில் சட்டவிரோத மது விற்பனை தடுப்பதற்கான ஆலோசனை கூட்டம், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் காணொலி வாயிலாக நேற்று நடந்தது. திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர், எஸ்.பி., ஸ்ரீநிவாசபெருமாள்; ஆந்திர மாநிலம் திருப்பதி கலெக்டர் லட்சுமி ஷா, எஸ்.பி., கிருஷ்ண காந்த், சித்துார் கலெக்டர் ஷான் மோகன் சாகிலி, எஸ்.பி., ஜோஸ்வா ஆகியோர் பங்கேற்றனர்.கூட்டத்தில், மாநில எல்லைப் பகுதிகளில் இருந்து சட்ட விரோத மதுபான விற்பனை தடை செய்ய வேண்டும். திருவள்ளூர் - ஆந்திர மாநில எல்லையில் உள்ள, எளாவூர், பொம்மாஜிகுளம், நாகலாபுரம் , பொன்பாடி, தேவலாம்பாபுரம் சோதனை சாவடி வழியாக, சட்ட விரோத மதுபான விற்பனையை தடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, உதவி பயிற்சி கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வதஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை