உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையில் வாழை கழிவுகள் வாகன ஓட்டிகள் அச்சம்

சாலையில் வாழை கழிவுகள் வாகன ஓட்டிகள் அச்சம்

திருவாலங்காடு,:சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கனகம்மாசத்திரம் அடுத்து அமைந்துள்ளது புதுார் கிராமம்.இங்கு தனியார் மருத்துவ கல்லுாரி எதிரே சாலை ஓரத்தில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வாழை இலை, பழங்களை இறக்கி விட்டு வரும் வாகனத்தில் சேகரமாகும் வாழை கழிவு கொட்டப்படுகிறது.இதனால் அப்பகுதி அசுத்தமாக காணப்படுவதுடன் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அவ்வழியாக மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் வாழை கழிவுகளை உண்ண கூட்டமாக கூடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர். வாழை கழிவை சாலையில் கொட்டப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி