உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / எல்லப்பநாயுடு பேட்டை தரைப்பாலம் சேதம்

எல்லப்பநாயுடு பேட்டை தரைப்பாலம் சேதம்

திருவாலங்காடு:பூண்டி ஒன்றியம் எல்லப்பநாயுடுபேட்டை கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு திருவள்ளூர், திருத்தணிக்கு சென்று வருகின்றனர். எனவே திருப்பதி -- சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல எல்லப்பநாயுடுபேட்டை கொசஸ்தலையாற்று தரைப்பாலம் வழியாக புதூர் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்தாண்டு டிசம்பரில் பெய்த கனமழையால் கொசஸ்தலையாற்றில் வெள்ளம் ஏற்பட்டு 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட எல்லப்பநாயுடுபேட்டை தரைப்பாலம் சேதமடைந்தது. அதிகாரிகள் மணல் மூட்டைகள் கொண்டு தற்காலிகமாக சீரமைத்தனர். இந்தாண்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தரைப்பாலம் உடையும் அபாயம் உள்ளதால் எல்லப்பநாயுடுபேட்டை பகுதிவாசிகள் அச்சமடைந்து உள்ளனர். இந்நிலையில் தரைப்பாலத்தை நிரந்தரமாக சீரமைக்கவும், தடுப்பை விரைந்து அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை