உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஏரியில் மணல் திருட்டு 9 பேருக்கு காப்பு

ஏரியில் மணல் திருட்டு 9 பேருக்கு காப்பு

மீஞ்சூர்: மீஞ்சூர் அடுத்த மேலுார் திருவுடையம்மன் கோவில் நிலம், கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதிகள், பெரியமுல்லைவாயல் ஏரி ஆகிய இடங்களில், இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மணல் மற்றும் சவுடு மண் அள்ளப்படுவதாக புகார்கள் வந்தன.இதையடுத்து தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் இரவு பெரியமுல்லைவாயல் ஏரியில் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன், லாரிகளில் மணல் மற்றும் சவுடு மண் அள்ளப்படுவதை கண்டனர்.அவர்களை சுற்றிவளைத்து பிடித்து, மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சோழவரம் நீர்வளத்துறை உதவி பொறியாளர் சுந்தரம் அளித்த புகாரின்படி, மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிந்து, பெரியமுல்லைவாயலைச் சேர்ந்த மாரிமுத்து, 47, வெள்ளிவாயல் சாவடியை சேர்ந்த தனபால், 60, சென்னையைச் சேர்ந்த கோட்டீஸ்வரன், 37, உள்ளிட்ட ஒன்பது பேரை கைது செய்தனர்.மேலும், மணல் திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட நான்கு லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை