| ADDED : ஜன 25, 2024 08:15 PM
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டில் இருந்து சோளிங்கர் செல்லும் நெடுஞ்சாலையில், தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. சோளிங்கரில் இருந்து பள்ளிப்பட்டு வழியாக ஆந்திர மாநிலம், செல்லும் வாகனங்களும், பள்ளிப்பட்டில் இருந்து பலிஜிகண்டிகை வழியாக பெங்களூரு செல்லும் வாகனங்களும், இந்த தரைப்பாலத்தை கடந்தே பயணித்து வருகின்றன. வடகுப்பம் அருகே, ஓடை ஒன்று குறுக்கிடுகிறது. இந்த ஓடையில், புதிதாக தரைப்பாலம் கட்டப்பட்டது. ஆனால், இதற்கான இணைப்பு சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக கிடந்தது. இதனால், பாலத்தை கடக்கும் வாகனஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். பாலத்தின் முன்பாக உள்ள மேடு பள்ளங்களை கவனிக்க முடியாதபடி, மண் மூடிக்கிடந்ததால், வேகமாக வரும் வாகனங்கள், நிலை தடுமாறும் நிலை இருந்தது. இது குறித்து நம் நாளிதழயில் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து, பாலத்தின் இணைப்பு சாலையில், தார் மற்றும் ஜல்லி கற்கள் கொண்டு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது.