உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தங்கையின் காதலனை வெட்டிய அண்ணன் கைது

தங்கையின் காதலனை வெட்டிய அண்ணன் கைது

தாம்பரம்:அனகாபுத்துார், கவுரி நகரைச் சேர்ந்தவர் விக்ரம், 20; பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்தினுள், முடிவெட்ட வருவோரை கணக்கெடுக்கும் ஒப்பந்த ஊழியர்.கடந்த ஏழு மாதங்களாக, தாம்பரம், மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த நிஷா என்பவரை காதலித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, காதலியை பார்ப்பதற்காக, அவரது வீட்டிற்கு சென்றார்.வீட்டில், இருவரும் பேசிக் கொண்டிருந்ததை, காதலியின் சகோதரர் அபின்குமார், 20, மற்றும் தந்தை பார்த்ததால், பிரச்னை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அபின்குமார், கத்தியால் விக்ரமை வெட்டினார்.தலையில் படுகாயமடைந்த விக்ரமை, மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக,தாம்பரம் போலீசார் வழக்குப் பதிந்து, அபின்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி