| ADDED : ஜன 09, 2024 08:42 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் த. பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.இதை பெறுவதற்கு, பொதுப்பிரிவு இளைஞர்கள் தங்கள் கல்வி தகுதியை பதிவு செய்து 5 வருடமும், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு வருடம் போதுமானது.உதவித்தொகை பெற தகுதியுள்ள, விருப்பமுள்ள பதிவுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ, https://tnvelaivaaippu.gov.inமற்றும் https://employmentexchange.tn.gov.in ஆகிய இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் பிப்., 28க்குள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.