| ADDED : ஜன 25, 2024 08:16 PM
கடம்பத்துார்:நெடுஞ்சாலையில் விளம்பர பதாகை வைக்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால், கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில், விளம்பர பதாகை வைப்பது தற்போது அதிகரித்து வருகிறது.இவ்வாறு வைக்கப்படும் விளம்பர பதாகைகள், நிகழ்ச்சி முடிந்தும் அகற்றப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில், நெடுஞ்சாலையோரம் வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள், தற்போது அரசு அலுவலகத்தையே ஆக்கிரமித்து வருகின்றன.திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள கடம்பத்துார் ஒன்றியம் மேல்நல்லாத்துார் ஊராட்சி அலுவலகத்தை ஆக்கிரமித்து, திருமண நிகழ்ச்சி விளம்பர பதாகை வைத்திருப்பது, சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, விளம்பர பதாகை வைப்பது மற்றும் கொடிக்கம்பங்கள் கட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.