உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மேம்பாலத்தில் மண் குவியல் வாகன ஓட்டிகள் தவிப்பு

மேம்பாலத்தில் மண் குவியல் வாகன ஓட்டிகள் தவிப்பு

பொன்னேரி:பொன்னேரி அடுத்த ஜனப்பசத்திரம் - காரனோடை இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆற்றுப்பாலம் அமைந்து உள்ளது. சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் இந்த பாலம் அமைந்திருப்பதால், நாள் முழுதும் வாகன போக்குவரத்து இருக்கிறது. சவுடு, மணல் ஏற்றிச்செல்லும் லாரிகளில் இருந்து சிதறுபவை, பாலத்தின் ஓரங்களில் குவிகிறது. இது இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்துகிறது.தற்போது பாலத்தின் இருபுறம் குவிந்து கிடக்கும் மண் குவியல்கள், காற்றில் பறந்து புழுதியாக பறக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.மேலும் கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டு சிரமத்திற்கு ஆளாகின்றனர். பாலத்தில் குவியும் மண்ணை அவ்வப்போது அகற்றி, பராமரிப்பதில் தேசிய நெடுஞ்சாலையினர் அக்கறை காட்டுவதில்லை என வாகன ஓட்டிகள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.மேற்கண்ட பாலத்தின் ஓரங்களில் குவிந்திருக்கும் மண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை