உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி கோவிலில் 3 நாட்கள் உற்சவர் வீதியுலா

திருத்தணி கோவிலில் 3 நாட்கள் உற்சவர் வீதியுலா

திருத்தணி: திருத்தணி கோவிலில் இன்று பொங்கல் பண்டிகையை ஒட்டி, உற்சவர் முருகப் பெருமான் மலைக்கோவிலில் பின்புறம் உள்ள குருக்கள் மற்றும் அர்ச்சகர் வசிக்கும் பகுதிகளில், திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.நாளை மாட்டுப் பொங்கல் தினத்தன்று, மேல்திருத்தணியிலும், 17ம் தேதி காணும் பொங்கல் நாளில் திருத்தணி நகரத்திலும் உற்சவர் முருக பெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.கடந்த டிச., 4ம் தேதி இரவு 'மிக்ஜாம்' புயலால் பெய்த பலத்த மழையால், மலைப்பாதையில் மண்சரிவு மற்றும் தடுப்புச்சுவர் சேதம் அடைந்தது. இதையடுத்து பேருந்து, வேன் மற்றும் கனரக வாகனங்கள் மலைப்பாதையில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.தற்போது, கோவில் நிர்வாகம் மலைப்பாதையில் சரிவு மற்றும் தடுப்பு சுவருக்கு கான்கிரீட் அமைத்துள்ளதால், 40 நாட்களுக்கு பின் நேற்று காலை முதல் மலைக்கோவிலுக்கு பேருந்து, வேன் மற்றும் கனரக வாகனங்கள் செல்வதற்கு கோவில் நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை