உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை துவங்குகிறது

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை துவங்குகிறது

உடுமலை;உடுமலை கோட்டத்தில், 4,297 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, நாளை (26ம் தேதி) துவங்குகிறது. உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் மொத்தமாக, 19 மையங்களில், 4,297 மாணவர்கள் மற்றும் 60 தனித்தேர்வர்கள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.தேர்வுக்கு, ஐந்து வழித்தடங்களில், போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படுகின்றன.மேல்நிலை பொதுத்தேர்வின் நிறைவில் பத்தாம் வகுப்பு தேர்வும் நடப்பதால், மையங்களில் அடிப்படை வசதிகள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டுள்ளது.மேல்நிலைத் தேர்வு நடக்காத மையங்களில், பத்தாம் வகுப்பு தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 19 மையங்களிலும், துறை அலுவலர்கள் மற்றும் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், நிலையான பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களுக்கு அட்வைஸ்

தேர்வு நேரத்துக்கு முன்பாக மையங்களுக்கு வந்துவிட வேண்டும். பதட்டம், பயத்தினால் தேர்வை தவறவிடக்கூடாது. தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்நோக்க வேண்டும்.பெற்றோர் மாணவர்களின் உடல்நலத்துடன், மனநலத்திலும் கவனம் செலுத்தி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.தேர்வுநுழைவு சீட்டை தவறாமல் எடுத்து வர வேண்டும். தொலைதுாரத்திலிருந்து வருவோர், கால தாமதத்தை தவிர்க்க, வழக்கமான நேரத்தை விட முன்பாக பள்ளிக்கு வர பெற்றோர் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் அறிவுரை வழங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை