உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டிராவல்ஸ் பஸ் கவிழ்ந்து விபத்து 12 பேர் காயம்

டிராவல்ஸ் பஸ் கவிழ்ந்து விபத்து 12 பேர் காயம்

திருப்பூர்;கேரளா மாநிலம், கண்ணுாரில் இருந்து, 36 பயணிகள், இரு டிரைவருடன் நேற்று முன்தினம் இரவு டிராவல்ஸ் பஸ் கிளம்பி மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. பல்லடம் வழியாக சென்ற போது, அண்ணாநகர் அருகே பஸ்சின் குறுக்கே மாடு வந்தது. மாடு மீது மோதாமல் இருக்க பஸ்சை நிறுத்த முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்தது.இந்த விபத்தில், பஸ்சில் பயணம் செய்த, ஐந்து பெண்கள் உட்பட, 12 பேர் காயமடைந்தனர். உடனே, அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நடுரோட்டில் கவிழ்ந்த பஸ் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை