உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வங்கதேசத்தினர் 3 பேர் கைது :போலி ஆதார் பறிமுதல்

வங்கதேசத்தினர் 3 பேர் கைது :போலி ஆதார் பறிமுதல்

திருப்பூர்;பெருமாநல்லுார் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி, போலி ஆதார் அட்டையுடனும் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுார், பத்மாவதிபுரம், எஸ்.எஸ்., நகர் பகுதியில் வங்கதேசத்தைச் சேர்ந்த நபர்கள் தங்கியிருப்பதாக, பெருமாநல்லுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் தலைமையில் போலீசார் சோதனை நடத்திய போது, ஒரு வீட்டில் தங்கியிருந்த இம்ரான்உசேன், 32, சுஜோன் அன்சாரி, 45, ஜிசான்சர்தார், 37 ஆகிய மூன்று பேர் பிடிபட்டனர்.கடந்த எட்டு ஆண்டுகள் முன் வங்கதேசத்திலிருந்து, மேற்குவங்க மாநிலம் பங்கா பகுதி வழியாக திருட்டுத்தனமாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர். அங்கிருந்து, ரயிலில் திருப்பூர் வந்து, கிடைத்த வேலையை செய்து கொண்டு தங்கியிருந்துள்ளனர். மேலும், திருப்பூர் முகவரியில், போலி ஆதார் அட்டை வைத்திருந்தனர்.அவர்களது பிறப்பு சான்றிதழ் மற்றும் வங்கதேச அடையாள அட்டை கைப்பற்றப்பட்டது. அவர்களிடம் பாஸ்போர்ட், விசா உட்பட எந்த முறையான ஆவணங்களும் இல்லை. இதனால், மூவரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும், அவர்களுக்கு ஆதார் அட்டை தயாரித்து வழங்கிய நபர்கள்; அவர்களுடன் வேறு யாரும் வங்கதேசத்திலிருந்து இது போல் வந்துள்ளனரா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை