உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆவின் கூட்டுறவு சங்கம் தரம் உயர்த்த ஆய்வு

ஆவின் கூட்டுறவு சங்கம் தரம் உயர்த்த ஆய்வு

பல்லடம்:பல்லடம் அருகே ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், 'ஆவின்' அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.பல்லடம் ஒன்றியம், பணிக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னியகவுண்டம்பாளையம் கிராமத்தில் ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், கடந்த, 1986ம் ஆண்டு துவங்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு வந்த இச்சங்கம், ஆவின் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வந்தது.இப்பகுதியில் தனியார் பால் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வருகிறது. விலை கிடைப்பதன் காரணமாக, பால் உற்பத்தியாளர்கள் தனியார் பால் கொள்முதல் நிலையத்தை நாடுகின்றனர்.இதனால், ஆவின் கூட்டுறவு பால் சங்க உறுப்பினர்கள் படிப்படியாக குறைந்து வருகின்றனர். இங்குள்ள ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை தரம் உயர்த்தி, பால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான கடன் வசதி, காப்பீடு வசதி, கூட்டுறவு சங்கத்துக்கு தேவையான புதிய இயந்திர வசதி, கால்நடை மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என, பணிக்கம்பட்டி கிராம பொதுமக்கள் சார்பில், தமிழக பால்வளத்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.கோரிக்கை மனுவை தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்க பொது மேலாளர், விரிவாக்க அலுவலர் மற்றும் செயல் அலுவலர் ஆகியோர், ஆவின் பால் விற்பனை நிலையத்தை நேரில் ஆய்வு செய்தனர். விவசாயிகளிடம் இது குறித்து ஆலோசித்த அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை