உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புகார் மீது நடவடிக்கை பார்வையாளர் அட்வைஸ் 

புகார் மீது நடவடிக்கை பார்வையாளர் அட்வைஸ் 

திருப்பூர்;திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் செலவின பார்வையாளர் அசோக்குமார், நேற்றுமுன்தினம் முதல் திருப்பூரில் முகாமிட்டுள்ளார்.நேற்று அவர், கலெக்டர் அலுவலக இரண்டாவது தளம் அறை எண்: 225- ல் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார். டி.ஆர்.ஓ., ஜெய்பீம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜெயராமன், தேர்தல் பிரிவு தாசில்தார் தங்கவேல் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.'சி-விஜில்' செயலியில் பொதுமக்கள் பதிவு செய்யும் புகார்கள், கட்டுப்பாட்டு அறைக்கு வரும் அழைப்புகள், தேர்தல் புகார்கள் மீது பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழுவினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார். தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்; எவ்வித விதிமீறல்களும் நடைபெற்றுவிடக்கூடாது என, தேர்தல் பார்வையாளர் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி