உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகராட்சி கட்டளை மையம்; மேயர், துணை மேயர் ஆய்வு

மாநகராட்சி கட்டளை மையம்; மேயர், துணை மேயர் ஆய்வு

திருப்பூர் : மாநகராட்சி ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையத்தில் மேயர், துணை மேயர் ஆய்வு செய்தனர்.திருப்பூர் மாநகராட்சி சார்பில், ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையம் செயல்படுகிறது. மாநகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் இங்கு கண்காணிக்கப்படுகிறது.மேலும் இலவச தொலைபேசி இணைப்பில் பிரச்னை குறித்த புகார்கள், துறை வாரியான விவரங்கள் பெறவும் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இம்மையத்தின் செயல்பாடுகளை நேற்று மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல தலைவர்கள் உமா மகேஸ்வரி, கோவிந்தராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, மையத்தை தொடர்பு கொண்ட பொதுமக்களிடம் மேயர் பேசி புகார் குறித்த விவரங்களைப் பெற்று, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் விளக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை