உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கார் மோதி முறிந்த மின் கம்பம்; சீரமைப்பு பணிகள் தீவிரம்

கார் மோதி முறிந்த மின் கம்பம்; சீரமைப்பு பணிகள் தீவிரம்

பல்லடம்;பல்லடம்-, பொள்ளாச்சி ரோடு, நாசுவம்பாளையம் கிராமத்துக்குச் செல்லும் வழியாக சென்ற கார் ஒன்று, ரோட்டோரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியது. இதில், மின்கம்பம் முறிந்ததை தொடர்ந்து, அதனுடன் இணைப்பில் இருந்த மற்றொரு மின்கம்பமும் முறிந்தது.இதனால், மின் கம்பிகள் ரோட்டில் தொங்கிக் கொண்டிருந்தன. அதிர்ஷ்டவசமாக காரில் சென்றவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக, மின்வாரியத்துக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர்.அகழ் இயந்திரங்கள் உதவியுடன், முறிந்த மின்கம்பங்கள் அகற்றப்பட்டு, புதிய மின்கம்பங்கள் பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில், சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை