உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முன்னாள் முதல்வருடன் விவசாய சங்கத்தினர் சந்திப்பு

முன்னாள் முதல்வருடன் விவசாய சங்கத்தினர் சந்திப்பு

பல்லடம் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே நாதகவுண்டம்பாளையம் கிராமத்தில், முன்னாள் விவசாய சங்க தலைவர் என்.எஸ்.பழனிசாமியின் நினைவிடம் உள்ளது. இங்கு, விவசாய சங்கம் சார்பில் மணிமண்டபம் கட்டும் பணி நடந்து வருகிறது.இதன் திறப்பு விழா, ஆக., 18ல் நடக்கிறது. இதற்காக, பல்வேறு கட்சி தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரையும் சந்தித்து, சங்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நேற்று, முன்னாள் முதல்வர் பழனிசாமியை சென்னையில் சந்தித்த விவசாய சங்க நிர்வாகிகள், விழாவில் தலைமை வகித்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தனர்.இது குறித்து, செயல் தலைவர் வெற்றி கூறுகையில், ''விவசாய சங்க தலைவர் என்.எஸ்.பழனிசாமியின் மணி மண்டப திறப்பு விழாவை பிரமிக்கும் வகையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக, முன்னாள் முதல்வர் பழனிசாமி உட்பட அனைத்துக் கட்சி தலைவர்கள், அமைப்பினர், முக்கிய பிரமுகர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுத்து வருகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை