உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முத்தாலம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்

முத்தாலம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்

உடுமலை;உடுமலை அருகே, பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ஓம் சக்தி கோஷம் முழங்க, முத்தலாம்மன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று கோலாகலமாக நடந்தது.உடுமலை அருகே, பூலாங்கிணறு முக்கோணத்தில், முத்தாலம்மன் கோவில் உள்ளது. கோவிலில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விநாயகர், முத்தாலம்மன் மற்றும் நவக்கிரகங்கள் ஆகிய சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டன.கும்பாபிேஷக விழா மங்கள இசை, விக்னேஸ்வர பூஜையுடன் கடந்த 22ல், துவங்கியது. கடந்த, 23ல், விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி, மகா லட்சுமி ேஹாமம் நடந்தது.தொடர்ந்து தீர்த்த ஊர்வலம், முளைப்பாலிகை அழைத்து வந்து, பவுர்ணமி பூஜை நடைபெற்றது. நேற்று காலை மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.காலை, 9:00 மணிக்கு மேல், கலசம் புறப்படுதல், அம்மன் கோபுர கலசம் கும்பாபிேஷகம் நடந்தது.பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் 'ஓம் சக்தி' கோஷம் முழங்க கும்பாபிேஷக விழா கோலாகலமாக நடந்தது.பின்னர், அம்மனுக்கு மகா அபிேஷகம், தசதரிசனம், மகா தீபாராதனைக்கு பிறகு, பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி