திருப்பூர்:பள்ளி அணிகளுக்கான மாவட்ட வாலிபால் போட்டியில், மாணவியர் இருபிரிவிலும் வித்ய விகாசினி பள்ளி அணி வெற்றி பெற்று அசத்தியது.திருப்பூர், ஜெய் நகர், வித்ய விகாசினி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட வாலிபால் போட்டி நடந்தது. மாணவர் ஜூனியர் பிரிவில், 13, பொது பிரிவில், 12 அணிகள் பங்கேற்றன. மாணவியர் ஜூனியர் பிரிவில் பத்து, பொது பிரிவில் எட்டு என மொத்தம், 33 அணிகள் பங்கேற்று விளையாடின.மாணவியர் ஜூனியர் பிரிவு இறுதி போட்டியில், வித்ய விகாசினி பள்ளி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில், அம்மாபாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி அணியை வென்றது. பொது பிரிவு இறுதி போட்டியில், 2 - 0 என்ற செட் கணக்கில், வித்ய விகாசினி பள்ளி அணி - ஆத்துப்பாளையம், ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அணியை வென்றது. ஜூனியர், பொதுப்பிரிவு இரண்டிலும் வித்யவிகாசினி அணியே வென்றது.மாணவர் ஜூனியர் பிரிவில், ஏ.பி.சி., பள்ளி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில், வித்ய விகாசினி பள்ளி அணியையும், பொதுப் பிரிவில், ஏ.வி.பி., பள்ளி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில், ஆத்துப்பாளையம், வித்ய விகாசினி பள்ளி அணியையும் வென்றது. போட்டி ஏற்பாடுகளை பள்ளியின் செயலாளர் நகுலன் பிரணவ் செய்திருந்தார்.பரிசளிப்பு விழாவுக்கு தாளாளர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். ஈரோடு வனச்சரக அலுவலர் சந்தோஷ் சுப்பிரமணியம், வாலிபால் சங்க தலைவர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி, பாராட்டினர். பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கார்த்தி கேயன் நன்றி கூறினார்.