உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கண் சிகிச்சை முகாம் 385 பேர் பங்கேற்பு

கண் சிகிச்சை முகாம் 385 பேர் பங்கேற்பு

திருப்பூர்;திருப்பூர் லயன்ஸ் கிளப், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் பரிசோதனை, மருத்துவ முகாம், டவுன்ஹால், லயன் கிளப் ஹாலில் நேற்று நடந்தது.லயன்ஸ் கிளப் முன்னாள் தலைவர் ராமலிங்கம் துவக்கி வைத்தார். ராமலிங்கம் சரஸ்வதி டிரஸ்ட், அருணாசலம் செட்டியார் லட்சுமியம்மாள் டிரஸ்ட் முகாமை இணைந்து நடத்தினர். முகாமில், 385 பேர் பங்கேற்றனர். உயர் சிகிச்சைக்காக 40 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். மேலும், 120 பேருக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு பரிசோதிக்கப்பட்டது. லயன்ஸ் கிளப் தலைவர் கணேசன், செயலாளர் ராஜேஷ், பொருளாளர் ரகுநாதன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். ஏப்ரல் மாதத்துக்கான இலவச கண் சிகிச்சை முகாம், ஏப்ரல், 21ல் நடக்குமென அறிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை