உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குழந்தையை கடித்த தெருநாய் கட்டுப்படுத்த வேண்டுகோள்

குழந்தையை கடித்த தெருநாய் கட்டுப்படுத்த வேண்டுகோள்

திருப்பூர்;திருப்பூர் மாநகர பகுதியில் பெருகி வரும் தெருநாய்களால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.நாய்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவ்வகையில், திருப்பூர் - பி.என்., ரோடு, கண்ணபிரான் நகரில், சில நாட்களுக்கு முன், தாயுடன் கோவிலுக்கு சென்றிருந்த, மூன்றரை வயது குழந்தையை தெருநாய் கடித்தது.தொடர்ந்து, காயமடைந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. இதேபோன்று ரோட்டில் விளையாடும் சிறியவர்கள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் என, பலரையும் தெருநாய்கள் விரட்டுகின்றது. இரவு நேரங்களில் ரோட்டில் நடமாட முடிவதில்லை. அப்பகுதியில் பெருகியுள்ள ஏராளமான தெருநாய்களால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை