உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.2 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு

ரூ.2 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு

பல்லடம்;பல்லடம் அருகே, 2 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலம் அறநிலையத்துறை மூலம் மீட்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையம் கிராமத்தில், ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அருள்மிகு விநாயகர், மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான, 9.86 ஏக்கர் புஞ்சை நிலம் தனியார் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.நேற்று அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஜெயதேவி தலைமையில் கோவில் நிலம் அளவீடு செய்யப்பட்டு, மீட்பு பணிகள் துவங்கின. அறநிலையத்துறை சார்பில் இது குறித்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.கோவில் நில மீட்பு தனி தாசில்தார் ரவீந்திரன், பல்லடம் சரகர் ஆய்வாளர், கோவில் தக்கார், கோவில் பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை