உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு பள்ளிகளில் திருப்புதல் தேர்வு

அரசு பள்ளிகளில் திருப்புதல் தேர்வு

உடுமலை;தமிழக அரசு, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், வரும் மார்ச் மாதத்தில் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இத்தேர்வுக்கு மாணவ, மாணவியர் தயாராகும் வகையில், அரசுப்பள்ளிகளில், பல்வேறு வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.அவ்வகையில், பொதுத்தேர்வை எதிர்கொள்ள, முதல் திருப்புதல் தேர்வு உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள, அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில், தற்போது நடந்து வருகிறது.இத்தேர்வு, மேல்நிலை வகுப்புகளுக்கு கடந்த 5ம் தேதியும், பத்தாம் வகுப்பு, 8ம் தேதியும் தேர்வுகள் துவங்கியது.இதில், முழு பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்வித்தாள் தயார் செய்யப்பட்டு, தேர்வு நடக்கிறது. பொதுத்தேர்வுக்கு முன், இன்னும் இரண்டு திருப்புதல் நடத்த, பள்ளிக்கல்வித்துறையினர் அட்டவணை வழங்கியுள்ளனர்.போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு மற்றும் கனமழை காரணமாக, நேற்று, திருப்புதல் தேர்வுக்கு மாணவர்கள் பலரும் விடுப்பு எடுத்து விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை