உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் அம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சிறப்பு பூஜை

திருப்பூர் அம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சிறப்பு பூஜை

திருப்பூர்:திருப்பூரிலுள்ள சோழாபுரி அம்மன் கோவிலில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா நேற்று மாலை பூஜை நடத்தி வழிபாடு செய்தார்.தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, திருப்பூரில் உள்ள தங்களது குடும்ப நண்பர் 'டாலர்' பாலசுப்ரமணியம் இல்லத்துக்கு நேற்று வந்தார். அதன்பின் அவர், ஊத்துக்குளி ரோட்டில் உள்ள திருப்பூர் திருப்பதி கோவிலில் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.தொடர்ந்து, பல்லடம் ரோட்டில் உள்ள சோழாபுரி அம்மன் கோவிலுக்குச் சென்ற அவர், அங்கு அரை மணி நேரத்துக்கும் மேல் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினார். முதல்வர் ஸ்டாலினின் குடும்ப நண்பர் 'டாலர்' பாலசுப்ரமணியம், எம்.எல்.ஏ., செல்வராஜ், நகர தி.மு.க., செயலாளர் நாகராஜ் உடனிருந்தனர்.பூஜை முடிந்து வெளியே வந்த துர்கா காரில் ஏறி, கோவை விமான நிலையத்துக்கு புறப்பட்டார். துர்கா வருகை அறிந்து அப்பகுதியில் கூட்டம் திரண்டது. பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார், கோவில் முன்புறம் யாரும்அணுகாத வகையில் தடுத்தனர்.அவ்வழியாக வந்த ஒரு ஆம்னி பஸ்சை நிறுத்தி, யாரும் போட்டோஎடுக்காத வகையில் தடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை