உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / யாரை தோற்கடிக்கணும்? ஹிந்து முன்னணி திட்டவட்டம்

யாரை தோற்கடிக்கணும்? ஹிந்து முன்னணி திட்டவட்டம்

பல்லடம்:பல்லடத்தில், ஹிந்து முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது. மாநில செயலாளர்கள் தாமு வெங்கடேஸ்வரன், செந்தில்குமார், சண்முகம், சேது, கோட்ட பொறுப்பாளர்கள் செந்தில்குமார், கோவிந்தராஜ், மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசினார்.கூட்டத்தில் பயங்கரவாத அமைப்புகளின் அரசியல் பிரிவுகளுடனான கூட்டணியை இரு திராவிட கட்சிகளும் கைவிடுதல், பயங்கரவாத ஆதரவு கூட்டணிக்கட்சிகளைத் தோற்கடித்தல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் தலைவர் சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர்கள் லோகநாதன் சர்வேஸ்வரன், ராஜ்குமார், செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை