உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை /  பெண்ணுக்கு தொந்தரவு வி.ஏ.ஓ.,வுக்கு வலைவீச்சு

 பெண்ணுக்கு தொந்தரவு வி.ஏ.ஓ.,வுக்கு வலைவீச்சு

சேத்துப்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை சேர்ந்த கணவரை இழந்த, 35 வயது பெண், அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார். தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 36; மேல்வில்லிவலம் வி.ஏ.ஓ.,வாக உள்ளார். பெண்ணின் கடைக்கு, 12ம் தேதி சென்றவர், ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு செய்தபோது, பெண் கூச்சலிடவே, மிரட்டல் விடுத்து சென்றார். அன்று மாலை, தன் உதவியாளரான டேவிட்டை கடைக்கு அனுப்பியுள்ளார். அவர், 'நீ அழகாக இருக்கிறாய், எப்போது வருகிறாய் என்று சதீஷ்குமார் கேட்டார்' என கூறியதுடன், ஒரு ஏ.டி.எம்., கார்டை தந்து, 'எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்' என தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் டேவிட் மொபைல்போனை தொடர்பு கொண்ட சதீஷ்குமார், பெண்ணிடம் தரச்செய்து, 'தனியாக குடும்பம் நடத்த ஆசையாக உள்ளது' என, பேசியுள்ளார். அதிர்ச்சியடைந்த கைம்பெண், சேத்துப்பட்டு போலீசில் புகாரளித்தார். வி.ஏ.ஓ., சதீஷ்குமார், உதவியாளர் டேவிட் மீது வழக்குப்பதிந்த போலீசார், இருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை