மேலும் செய்திகள்
அரசு ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு
02-Oct-2025
போதை மாத்திரை வழக்கில் 4 பேர் சிக்கினர்
02-Oct-2025
காட்பாடி : காட்பாடி அருகே, விவசாயியின், 2 ஏக்கர் கரும்பு தோட்டம் தீயில் எரிந்து நாசமானது. வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த கருகிரி கிராமத்தை சேர்ந்தவர் ராமன், 46; இவருக்கு சொந்தமான, 6 ஏக்கர் விவசாய நிலத்தில் கரும்பு பயிரிட்டிருந்தார். நேற்று திடீரென கரும்பு தோட்டம் தீப்பற்றி எரிவதை கண்ட அப்பகுதியினர், ராமனுக்கும், காட்பாடி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி வந்த தீயணைப்ப துறையினர், தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். ஆனாலும், 2 ஏக்கர் கரும்பு தோட்டம் முழுவதும் எரிந்து நாசமானது. தீ விபத்து காரணம் குறித்து, காட்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Oct-2025
02-Oct-2025