உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை

 பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை

விழுப்புரம்: வளவனுார் அருகே பூச்சி மருத்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார். வளவனுார் அடுத்த சாலையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனுவாசன், 64; விவசாயி. இவர், அடிக்கடி மது அருந்திவிட்டு, வீட்டிற்கு வந்ததால், அவரது மனைவி முத்துமாரி, 55; கண்டித்துள்ளார். கடந்த 25ம் தேதி மீண்டும் சீனுவாசன் குடித்து விட்டு வந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், விரக்தியடைந்த சீனுவாசன், அவரது வீட்டின் அருகே பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற சீனுவாசன் நேற்று அதிகாலை இறந்தார். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை