உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாகனம் மோதி விவசாயி பலி

வாகனம் மோதி விவசாயி பலி

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணைநல்லுார் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி இறந்தார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெரியசேவலை கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 56; விவசாயி. இவர் நேற்று காலை 11:00 மணியளவில் மாட்டுக்கு, பெரியசேவலை - திருவெண்ணெய்நல்லுார் சாலையில் உள்ள விவசாய நிலத்தில் புல் அறுத்துக் கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றார்.அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அண்ணாமலை மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. உடன், அண்ணாமலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வழியில் அண்ணாமலை இறந்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை