உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி 29வது ஆண்டு விழா

ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி 29வது ஆண்டு விழா

விழுப்புரம் : விழுப்புரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 29வது பள்ளி ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.'ஜெயேந்திரயன்ஸ் டேன்சத்தான்' தலைப்பில் 25 வகையான மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. இதில், 1000 மாணவர்கள் பங்கேற்ற 5 மணி நேர நிகழ்வில் உலக சாதனை கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான விருதை கலாம்ஸ் உலக சாதனை குழுவினர் வழங்கினர்.தொடர்ந்து, வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும், விளையாட்டு போட்டியில் தேசியளவில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு நடிகர் சதீஷ் பரிசளித்தார். பின், மாணவ, மாணவிகளின் கண்கவரும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.பள்ளி தாளாளர் பிரகாஷ், செயலாளர் ஜனார்த்தனன், நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை