உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மொபைல் போன் டவர் மீது ஏறி போராட்டம்

மொபைல் போன் டவர் மீது ஏறி போராட்டம்

தளவாய்புரம்: தளவாய்புரம் அருகே சம்பளம் வழங்க கேட்டு மொபைல் போன் டவரில் ஏறி போராட்டம் செய்த துாய்மை காவலரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.தளவாய்புரம் அருகே அயன்கொல்லங் கொண்டான் ஊராட்சியில் தூய்மை காவலர்கள் நான்கு பேர் பணியாற்றுகின்றனர். புதிதாக மேலும் 6 பேர் ஒப்பந்த பணியாளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறி தற்காலிக துாய்மை காவலர் ஈஸ்வரன் 45, அருகில் இருந்த மொபைல் போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார். தகவல் அறிந்த சேத்துார் ஊரக போலீசார் ஈஸ்வரனிடம் சமாதானம் பேசி கீழே இறக்கினர். அவரிடம் விசாரணை செய்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்