உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேதமடைந்த மின்கம்பங்கள்: குடியிருப்போர் அச்சம்

சேதமடைந்த மின்கம்பங்கள்: குடியிருப்போர் அச்சம்

சிவகாசி : சிவகாசி பழைய விருதுநகர் ரோட்டில் சேதம் அடைந்துள்ள மின் கம்பங்களால் குடியிருப்புவாசிகள், வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே பழைய மின் கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.சிவகாசி பழைய விருதுநகர் ரோட்டில் குடியிருப்புகள், கடைகள், அச்சகங்கள், லாரி செட்கள் உள்ளன. இதனால் இந்த ரோட்டில் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள ஒரு சில மின்கம்பங்கள் அடி முதல் உச்சிவரை சேதம் அடைந்து துருப்பிடித்த கம்பிகளால் தாங்கி நிற்கிறது.ரோட்டின் ஓரத்திலேயே சேதமடைந்துள்ள இந்த மின்கம்பங்களால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். வருகின்ற கனரக வாகனங்கள் தெரியாமல் மின்கம்பத்தில் உரசினாலே இடிந்து விழ வாய்ப்பு உள்ளது. மேலும் குடியிருப்புகள், கடைகளும் அருகில் உள்ளது . இதனால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இப்பகுதியில் உடனடியாக சேதம் அடைந்த மின்கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி