மேலும் செய்திகள்
கல்லறை திருநாள் வழிபாடு
03-Nov-2025
அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறை
03-Nov-2025
இன்றைய நிகழ்ச்சி (நவ. 3)
02-Nov-2025
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையின் செயல்பாடுகள்விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பின் துாய்மை, சிகிச்சை தரம், பல்வேறு சிகிச்சை துறைகள் வந்துள்ளதால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகள், பிற மாவட்டங்களில் இருந்து வரும் உள், வெளிநோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.மகப்பேறு மருத்துவமனையை மேம்படுத்த செய்தவைமகப்பேறு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் 'நிக்கு' என்ற தனி தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கங்காரு தாய் கேர், தாய் நிக்கு போன்ற பல்வேறு பிரிவுகள் துவங்கப்பட்டு, குழந்தைகள் சிகிச்சைகள் சிறந்த முறையில் அளிக்கப்படுவதால், தற்போது பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.மருத்துவமனை பேட்டரி கார்கள் செயல்பாடுமருத்துவமனையின் மூன்று பேட்டரி கார்களில் இரண்டு இயக்கத்தில் உள்ளது. இதில் மற்றொன்றில் ஏற்பட்ட பழுதை சரி செய்வதற்கான பணிகள் நடக்கிறது. அப்பணிகள் முடிந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரும். இதன் மூலம் வளாகத்தில் நோயாளிகளை இடமாற்றம் செய்வது எளிதாகிறது. மருத்துமனையின் தற்போதைய தேவைக்கு மூன்று பேட்டரி கார்கள் போதுமானது.உள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் '‛டயட்' உணவுமருத்துவமனையில் நீரிழிவு சிகிச்சை பிரிவில் உள்ள உள்நோயாளிகளுக்கு மட்டும் சப்பாத்தி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது புதிதாக சப்பாத்தி மேக்கர் மிஷின் வாங்கப்பட்டு திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் அனைத்து பிரிவு உள்நோயாளிகளுக்கும் சப்பாத்தி, வெஜ் குருமா வழங்கப்படுகிறது. தமிழகத்திலேயே விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் மட்டுமே முதல் முறையாக அனைத்து பிரிவு உள் நோயாளிகளுக்கும் 'டயட் உணவு' வழங்கப்படுகிறது.நோயாளிகளின் மன அமைதிக்காக செய்தவைஇங்கு உள்நோயாளிகள் சிகிச்சைக்காக பல நாள்கள் மருத்துவமனையில் தங்க வேண்டியுள்ளது. இவர்களின் மனதிற்கு புத்துணர்ச்சி கொடுப்பதற்காக முதல் தளத்தில் புத்தர் சிலையுடன் கூடிய மன அமைதி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மாலையில் நோயாளிகள், உடன் தங்கியிருப்பவருடன் இங்கு வந்து அமர்ந்து மன அமைதியை பெறுகின்றனர். மேலும் மதியம் 12:00 மணி முதல் 1:00 மணி வரை யோகா வகுப்புகள் நடக்கிறது.குழந்தை கடத்தலை தடுப்பதற்கான முன்னேற்பாடுகள்மகப்பேறு மருத்துவமனையில் குழந்தை கடத்தலை தடுப்பதற்காக ரேடியோ அதிர்வெண் அடையாளம் என்ற சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் குழந்தையின் கையில் நீல நிறபட்டை, தாய்க்கு பெயருடன் பச்சை நிற அடையாள அட்டை, உடன் தங்கியிருப்பவருக்கு சிவப்பு நிற அடையாள அட்டை வழங்கப்படும். வார்டில் இருந்து வெளி நபர்கள் குழந்தையை கடத்த முயன்றால் வாசலில் சென்சார் சப்தம் காண்பித்து கொடுத்து விடும். தனியார் நிறுவன ஊழியர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.நோயாளிகளுக்கான ஆக்ஸிஜன் தேவையை போக்க செய்த நடவடிக்கைகள்மருத்துவமனையில் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் அமைப்பு இரண்டு உள்ளது. மகப்பேறு மருத்துவமனையில் இல்லை. அதனால் இந்த இரண்டில் ஒன்றை மகப்பேறு மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதனால் ஆண்டுக்கு ரூ. 36 லட்சம் சிலிண்டர் செலவு மிச்சமாகும். இதற்கான பணிகள் ரூ. 18 லட்சத்தில் நடந்து வருகிறது. இந்த மாதம் இறுதியில் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இதன் மூலம் மகப்பேறு மருத்துவமனையில் வரும் காலங்களில் தடையின்றி ஆக்ஸிஜன் விநியோகம் கிடைக்கும்.புதிததாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகள்முதல் முறையாக கட்டுப்பாடற்ற சிறுநீர் போக்கு பாதிப்பு அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யப்பட்டுள்ளது. மேலும் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் மூளை தண்டுவட திரவம், மூளையில் ரத்தக்கசிவு உள்ளிட்ட பல சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்படுகிறது. மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட தலைக்காயம் தொடர்பான சிகிச்சைகள் தற்போது விருதுநகர் அரசு மருத்துவமனையில் வழங்கப்படுகிறது.மருத்துவமனையில் அனைத்து உபகரணங்களும் உள்ளதாமாவட்ட நிர்வாகம் உதவியில் சமூக பொறுப்பு நிதி மூலம் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் பெறப்பட்டுள்ளது. மேலும் மொத்தம் உள்ள 8 அறுவை சிகிச்சை தியேட்டர்களில் 5 செயல்பாட்டில் இருந்தது. தற்போது கூடுதலாக 2 தியேட்டர்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. மீதமுள்ள ஒன்று, தேவை ஏற்படும் போது செயல்படுத்துவதற்காக தயார் நிலையில் உள்ளது.மகப்பேறு மருத்துவமனையில் கூடுதல் உறவினர் தங்குமிடம்மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளின் உடன் தங்குபவர்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகத்தின் உதவி மூலம் மருத்துவமனை, நகராட்சி நிதியின் மூலம் தற்போது புதிய உறவினர் தங்குமிடம் கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிவடைந்து செயல்பாட்டிற்கு வரும் போது உறவினர்கள் தங்க ஏதுவானதாக அமையும்.சித்த மருத்துவ பிரிவு மேம்படுத்துவற்கான முயற்சிகள்அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சித்த மருத்துவ பிரிவுக்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் தற்போது 10 படுக்கைகளுடன் கூடிய உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது. மேலும் வெளி நோயாளிகள், உள்நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.மருத்துவ மாணவர்களுக்கான நலத்திட்டங்கள்அரசு மருத்துவக்கல்லுாரியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தற்போது ரூ. 49 லட்சத்தில் கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, டேபிள் டென்னிஸ் விளையாட்டுகளுக்கு தேவையான மைதானங்கள் மேம்படுத்தி அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் மாணவர்களை தேசிய, மாநில அளவிலான விளையாட்டுகளுக்கு தயார் செய்ய முடியும். மேலும் கூடுதல் கட்டடங்கள், மாணவர்களுக்கான விடுதிகள் விரைவில் அமைக்கப்படும்.டாக்டர் கே.சீதாலட்சுமிமுதல்வர்அரசு மருத்துவக்கல்லுாரிமருத்துவமனை, விருதுநகர்
03-Nov-2025
03-Nov-2025
02-Nov-2025