உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாநில சதுரங்க போட்டிக்கு 8 பேர் தேர்வு

மாநில சதுரங்க போட்டிக்கு 8 பேர் தேர்வு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் நடந்த மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் 8 பேர் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அருப்புக்கோட்டையில் ஏ.பி.டி.எஸ்.எம்.பி. எஸ்., மெட்ரிக் பள்ளியில், ஜூனியர் செஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான சதுரங்க போட்டி நடந்தது. சாலியர் உறவின்முறை செயலாளர் சோமசுந்தரம் நிர்வாகி ராஜேந்திரன் துவக்கி வைத்தனர் இதில் 255 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.போட்டியில் லோகேஷ் கந்தன், ஆப்ரகாம்ஜஸ்டின், சஞ்சய் கணேஷ்பாண்டி, அருண்முகேஷ், ஜனனி, ஸ்ரீனிமேஷிகா, ஸ்ரீ தீபிகாதேவி, ஜெய சாதுர்யா ஆகிய 8 பேர் மாநில போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.வென்ற மாணவர்களுக்கு சாலியர் உறவின்முறை பொருளாளர் சண்முக கணபதி பரிசுகள் வழங்கினார். அருப்புக்கோட்டை சீனியர் செஸ் அகாடமி நிர்வாகிகள் ராமர், கலசலிங்கம். ஹரிகிருஷ்ணன் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை