உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பாதுகாப்பில்லாத வாடகை கட்டடத்தில் கூட்டுறவு கடன் சங்க அலுவலகம்

பாதுகாப்பில்லாத வாடகை கட்டடத்தில் கூட்டுறவு கடன் சங்க அலுவலகம்

நரிக்குடி : நரிக்குடியில் பாதுகாப்பில்லாத வாடகை கட்டடத்தில் 10 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. நகைகள், ஆவணங்களை பாதுகாப்பதில் சிரமம் இருப்பதால் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.நரிக்குடியில் செயல்பட்டு வந்த கூட்டுறவு கடன் சங்க கட்டடம் சேதம் அடைந்தது. 10 ஆண்டுகளுக்கு முன் பாதுகாப்பு கருதி வாடகை கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. இங்கு கடன் வழங்கும் ஆவணங்கள், விவசாயிகள் அடமானம் வைக்கும் நகைகளை பாதுகாக்க போதிய பெட்டக வசதி கிடையாது. விவசாய கடன் செலுத்தி முடித்த விவசாயிகளின் ஆவணங்களை திரும்ப பெறுவதில் கால தாமதம் ஏற்படுகிறது. அலுவலர்கள், விவசாயிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.நரிக்குடியில் அரசு புறம்போக்கு நிலங்கள் ஏராளமாக உள்ளன. புதிய கட்டடம் கட்ட முடியும். இல்லாவிட்டால் பழைய கட்டடத்தை அப்புறப்படுத்தி புதிய கட்டடம் கட்டலாம். அவ்வாறிருக்க புதிய கட்டடம் கட்ட இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளாததால் நகை, ஆவணங்கள் கொள்ளை போகும் அச்சம் உள்ளது. இதனால் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை