உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கட்டி பத்து நாளில் சேதமடைந்த வாறுகால்

கட்டி பத்து நாளில் சேதமடைந்த வாறுகால்

தளவாய்புரம் : தளவாய்புரம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சியில் கட்டிய10 நாளிலேயே பிளந்த வாறுகாலால் மக்கள் பணியை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.செட்டியார்பட்டி பேரூராட்சி 11வது வார்டு இந்திரா நகர் நாயுடு தெரு குடியிருப்பு பகுதி மெயின் தெரு 4 குறுக்கு தெருக்களுக்கு வாறுகாலுடன் பேவர் பிளாக் ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. 6வது நிதி ஆணையம் மாநில நிதி பகிர்வு திட்டம் மூலம் ரூ.67 லட்சம் செலவில் நடைபெறும் இப்பணிக்கான முதல்கட்டமாக வாறுகால் அமைக்கும் பணி நடந்து வரும் நிலையில் இரண்டாவது குறுக்கு தெருவில் கட்டி 10 நாளிலேயே வாறுகால் பிளவு பட்டு சரிந்து நிற்கிறது. இதனால் முழு பணியையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டுமென மக்கள் வலியுறுத்திகின்றனர்.இதுகுறித்து முருகேஸ்வரி (தி.மு.க) வார்டு உறுப்பினர்: 30 வருட கனவாக வடிகால் ரோடு பணிக்கு ரூ.67 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.டெண்டர் விட்டு எட்டு மாதங்கள் கழித்து மழை காலத்தில் தொடங்கி ஓரிரு நாள் மட்டும் பணி நடக்கிறது. வருட கணக்கில் நிலைக்க வேண்டிய வாறுகால் கசிவுடன் முறையான தளம் அமைக்காமல் போட்டுள்ளனர். இதனால் இரண்டாவது குறுக்கு தெருவில் கட்டி 10 நாளிலேயே வாறுகால் பிளவு பட்டு சரிந்து நிற்கிறது. மக்களுக்கு நான் தான் பதில் சொல்ல வேண்டும்.சந்தோஷமணி, குடியிருப்பாளர்: இன்ஜினியர், செயல் அலுவலர் என கண்காணிப்பு அதிகாரிகள் வேலையின் போது இல்லை. கல்துாசி அதிகமாக உள்ளதால் கான்கிரீட் உதிர்ந்து வருகிறது. அடித்தளம் முறையாக அமைக்கவில்லை. பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்.சந்திரகலா, செயல் அலுவலர்: பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் முடிவடையவில்லை. நேரில் வந்து விசாரிக்கிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை