உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவரை கைது செய்ய மறியல்

 வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவரை கைது செய்ய மறியல்

அருப்புக்கோட்டை: டிச. 11- -: அருப்புக்கோட்டை அருகே வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவரை கைது செய்யக்கோரி ரோடு மறியல் நடந்தது. அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த டிரைவர் முனிப்பாண்டி, 49, நேற்று முன்தினம் அதிகாலை 12:00 மணிக்கு, இவரது வீட்டின் பாத்ரூம் ஜன்னல் பகுதியில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் ஜன்னல் கதவு கண்ணாடிகள் உடைந்தன. அருப்புக்கோட்டை டவுன் போலீசார் அந்த பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனை பிடித்து விசாரணை செய்தனர். இந்தச் சம்பவத்தில் 6 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி ராமசாமிபுரம் மக்கள் ரோட்டில் நேற்று மாலை 5:00 மணிக்கு மறியல் செய்தனர். அருப்புக்கோட்டை ஏஎஸ்பி., மதிவாணன் , போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் கலந்து சென்றனர். மறியல் 2 மணி நேரத்திற்கு மேல் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி