உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர் ஓ.கோவில்பட்டி ஊராட்சி வார்டில் மறு ஓட்டு எண்ணிக்கை

விருதுநகர் ஓ.கோவில்பட்டி ஊராட்சி வார்டில் மறு ஓட்டு எண்ணிக்கை

விருதுநகர்:விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டி ஊராட்சியில் ஒன்றாவது வார்டு உறுப்பினர் தேர்தல் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மறு ஓட்டு எண்ணிக்கை நடந்தது.2019 டிசம்பரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. விருதுநகர் ஒன்றியம் ஓ.கோவில்பட்டி ஊராட்சி ஒன்றாவது வார்டில் வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் சங்கரபாண்டியன்,முத்துப்பாண்டியன் போட்டியிட்டனர். இதில் 188 ஓட்டுகளில் 2 செல்லாத ஓட்டுக்கள் தவிர்த்து முத்துப்பாண்டியன் 126 ஓட்டுக்களும், சங்கரபாண்டியன் 60 ஓட்டுக்களும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடிவை எதிர்த்து சங்கரபாண்டியன் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் ஜே.எம்.2., நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 4 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்த நிலையில் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.இதை தொடர்ந்து நேற்று விருதுநகர் ஒன்றிய அலுவலகத்தில் வைத்து மறு ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் மனுதாரர் சங்கரபாண்டியனும், முத்துப்பாண்டியன், அரசு வழக்கறிஞர் அதிபன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன், மனுதாரர் வழக்கறிஞர் மாரிமுத்து முன்னிலையில்வீடியோ பதிவு செய்யப்பட்டு மறு ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதன் முடிவுகளை அறிக்கையாக கலெக்டர் ஜெயசீலனிடம், வட்டார வளர்ச்சி அலுவலர் சமர்பித்துள்ளார். கலெக்டர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை