உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

காரியாபட்டி: சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும், வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.காரியாபட்டி எஸ்.ஐ., தலைமையில் போலீசார் ஹெல்மெட் அணிவதன்அவசியம், அணியாமல்வந்தால் விதிக்கப்படும் அபராதம், உயிர் இழப்பு ஏற்படுவதை தடுத்தல் குறித்து பேசினார். வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டாததால் எதிரே வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி பாதிக்கக்கூடும் என்பதை விளக்கி, கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எஸ் ஐ.,கள் சர்மிளா பேகம், கலைச்செல்வன், டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் சரவணன், போலீசார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை