உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரூ. 2.50 லட்சம் குட்கா பறிமுதல்

ரூ. 2.50 லட்சம் குட்கா பறிமுதல்

காரியாபட்டி, : காரியாபட்டி - திருச்சுழி ரோட்டில் எஸ்.ஐ.,அசோக்குமார் தலைமையில் நேற்று முன் தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அரசு தடை செய்யப்பட்ட புகையிலை, பான்பராக், குட்கா இருப்பது கண்டறியப்பட்டது. காரியாபட்டி பி. புதுப்பட்டியில் உள்ள பாலச்சந்திரன் பெட்டிக் கடைக்கு சப்ளை செய்ய வந்ததை, மதுரையைச் சேர்ந்த பாண்டியராஜன், திருமோகூர் மணிகண்டன் ஒப்புக்கொண்டனர். இதன் மதிப்பு ரூ. 1 லட்சத்து 13 ஆயிரத்து 796. அவர்களிடமிருந்த ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம், கடத்த வந்த காரையும் பறிமுதல் செய்தனர். பி.புதுப்பட்டி பாலச்சந்திரன், இவரது மனைவி சாந்தி கைது செய்யப்பட்டனர். உணவு பாதுகாப்பு அதிகாரி காசிம் ஆய்வு செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உடன் இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை