உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருமணமாகாத பெண்ணுக்கும் குடும்ப சொத்தில் சம உரிமை

திருமணமாகாத பெண்ணுக்கும் குடும்ப சொத்தில் சம உரிமை

சென்னை:கள்ளச்சாராய குற்றங்களுக்கு கடும் தண்டனை, எஸ்.சி., ஆணைய தலைவர் வயது வரம்பு உயர்வு உள்ளிட்ட, 14 சட்ட மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன.சட்டசபையில் நேற்று காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து முடித்ததும், 14 சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. 2024ம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதி ஒதுக்கச் சட்டம் தொடர்பாக, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கொண்டு வந்த, ஐந்து சட்ட மசோதாக்கள் விவாதமின்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.சென்னை மாநகர காவல் சட்டத்தை, திருப்பூர் மாநகர காவல் துறைக்கு நீட்டித்தல்; கழிவுநீரகற்றல் குற்றங்களுக்கான மேல்முறையீட்டு அதிகாரத்தை குடிநீர் வாரியத்தின் நிர்வாக இயக்குனருக்கு வழங்குதல்; புதிய மாநகராட்சிகளை உருவாக்குவதற்கான விதிகளை தளர்த்தும் இரண்டு சட்ட மசோதாக்கள் என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கொண்டு வந்த மூன்று மசோதாக்கள், சிறு விவாதத்துடன் ஒருமனதாக நிறைவேறின.திருமணம் ஆகாத ஆண்களுக்கு இணையாக, திருமணம் ஆகாத பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்க, வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் கொண்டு வந்த சட்ட மசோதா; தமிழ்நாடு எஸ்.சி., - எஸ்.டி., ஆணைய தலைவராக நியமிக்கப்படும் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் வயது வரம்பை 70லிருந்து 75 ஆக அதிகரிக்க, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி கொண்டு வந்த சட்ட மசோதா என, மொத்தம் 14 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை