உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கம்யூ., மேயர் காருக்கு வழி விடாத அரசு பஸ் டிரைவர் மீது போதை வழக்கு: மருத்துவ பரிசோதனை முடிவால் மேயருக்கு சிக்கல்

கம்யூ., மேயர் காருக்கு வழி விடாத அரசு பஸ் டிரைவர் மீது போதை வழக்கு: மருத்துவ பரிசோதனை முடிவால் மேயருக்கு சிக்கல்

நாகர்கோவில்: திருவனந்தபுரம் மேயர் பயணம் செய்த காருக்கு வழி விடாத டிரைவர் மீது போதை வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்று தெரிய வந்ததால் மேயர் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.திருவனந்தபுரம் மேயர் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆர்யா ராஜேந்திரன். கணவர் சச்சின் தேவ் எம்.எல்.ஏ. ஏப்., 27 இரவு 10:00 மணியளவில் மேயரும் அவரது குடும்பத்தினரும் பயணம் செய்த சொந்த காருக்கு முன்னால் சென்ற அரசு பஸ் வழி விடவில்லை. இதை தொடர்ந்து திருவனந்தபுரம் பாளையம் அருகே பஸ்சை ஓவர்டேக் செய்து வழிமறித்து காரை நிறுத்தினர்.பஸ் டிரைவர் யதுவிடம் மேயர் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். யது மீது போதை பயன்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவர் போதைப் பொருள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது . போதை பொருள் பயன்படுத்திவிட்டு அதன் கவரை தங்கள் வாகனத்தின் மீது வீசியதாக மேயர் கூறியிருந்தார். ஆனால் மருத்துவ பரிசோதனையில் போதை பயன்படுத்தவில்லை என முடிவு வந்துள்ளதால் மேயர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

jayvee
மே 02, 2024 12:01

கேரளா கம்யூனிஸ்ட் ஆட்சிதான் இந்தியாவில் மிக சிறந்த ஆட்சி என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மலையாள கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் எங்கே ?


Suresh Rajagopal
மே 01, 2024 12:34

கம்யூனிஸ்டுகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?


M Sundaram
மே 01, 2024 12:23

பதவி வெறி மற்றும் ஆணவத்தின் உச்சம் மேலே எழுதப்பட இருக்கும் தீர்ப்புக்கு தாங்க முடியாமல் கதருவார்கள்


vijay
ஏப் 30, 2024 12:51

கொஞ்ச நாளைக்கி முன்னால இவரை பற்றி புகழ்ந்து எழுதிய செய்தியை எங்கோ படித்தேன் இப்போ என்ன செய்வாங்க படித்த கேரள மக்கள்?


sridhar
ஏப் 30, 2024 10:55

இது தான் கம்யூனிச திமிர் ஒடுக்க வேண்டும்


K.Muthuraj
ஏப் 30, 2024 12:28

இங்குள்ள அதிமுக திமுக தமுக்க அமுக்க நாத்தமுக்க மருதிமுக எல்லார் திமிரும் ஒடுக்கியாச்சி இனி கம்யூனிஸ்ட் ஒன்னு தான் பாக்கி


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை