உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எட்டு சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு

எட்டு சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு

சென்னை: தாம்பரம் - நாகர்கோவில் உட்பட, எட்டு சிறப்பு ரயில்களின் சேவை மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பயணியரின் தேவையை கருத்தில் கொண்டு, சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்படுகிறது.நாகர்கோவில் - தாம்பரம் ஞாயிறு வாராந்திர சிறப்பு ரயில், மே 5 முதல் 26ம் தேதி வரை நீட்டித்து இயக்கப் படும்தாம்பரம் - நாகர்கோவில் திங்கள் வாராந்திர சிறப்பு ரயில், மே 27 வரை நீட்டித்து இயக்கப்படும் சென்னை சென்ட்ரல் - கொச்சுவேலி புதன், வியாழன் சிறப்பு ரயில்கள், மே 30 வரை நீட்டித்து இயக்கப்படும்நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் ஞாயிறு, திங்கள் சிறப்பு ரயில்கள், மே 5ம் தேதி முதல் 20ம் தேதி வரை இயக்கப்படும் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் ஞாயிறு, திங்கள் மற்றொரு வாராந்திரசிறப்பு ரயில், மே 12 முதல் 27ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளதுஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை