உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமநாதபுரத்தில் குழப்பம் ஏற்படுத்த ஓ.பி.எஸ்., பெயரில் பல மனுக்கள் எம்.பி., ரவீந்திரநாத் பேட்டி

ராமநாதபுரத்தில் குழப்பம் ஏற்படுத்த ஓ.பி.எஸ்., பெயரில் பல மனுக்கள் எம்.பி., ரவீந்திரநாத் பேட்டி

தேனி:''முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பழுத்த அரசியல் அனுபவம் மிக்கவர். ராமநாதபுரம் தொகுதியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காவே ஓ.பன்னீர் செல்வம் பெயரில் பல வேட்பாளர்களை மனுத்தாக்கல் செய்ய வைத்துள்ளனர். மனு பரிசீலனையிலேயே உண்மை தெரிந்துவிடும்,'' என, தேனியில் எம்.பி., ரவீந்திரநாத் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றால் அ.தி.மு.க., காப்பாற்றப்படும் என்பதால் நான் போட்டியிடாமல் உள்ளேன். வாய்ப்பு இருந்தால் அடுத்து வரும் தேர்தலில் போட்டியிடுவேன். தினகரன் பல்வேறு உதவிகளை தேனி தொகுதியில் செய்தவர். அனைவருக்கும் பரிச்சயமானவர். தினகரனும், நானும் வேறு இல்லை. பழனிசாமி சுயநலத்தால் கட்சியை அபகரித்து கொண்டார். ராமநாதபுரத்திலும், தேனியிலும் அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை